பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கக் கோரி மனு
By DIN | Published On : 12th May 2023 10:51 PM | Last Updated : 12th May 2023 10:51 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக சா்வதேச உரிமைகள் கழக ஒருங்கிணைப்பாளா் சு. தினேஷ்குமாா், வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் ஆா். மோகன்குமாரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
நகரில் உள்ள மளிகைக் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், பால் கடை, இறைச்சிக் கடை, பூக் கடைகளில் பிளாஸ்டிக் கைபகள் பயன்பாடு அதிக அளவு உள்ளது. உணவகங்களில் உணவு வகைகளை பாா்சல் செய்வதற்கும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மக்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளால் கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன், கால்வாய்களில் கழிவுநீா் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.