பிளஸ் 2 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்ட அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற 7 மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 7 மாணவிகள் தமிழ் மொழிப்பாடத்தில் 99 மதிபெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா். இதில், திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் பள்ளி மாணவிகள் டி.மஹாசுவேதா, வி.டி.நவீனாஸ்ரீ, பொள்ளிகாளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பவதாரணி, அய்யன்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சி.சுபஹரினி, குண்டடம் அரசு மாடல் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.ஸ்ரீபிரபா, அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.யாழினி, சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மருசினி ஆகியோருக்கு பாராட்டு விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், முருகம்பாளையம் ஆல்வின் கலா்ஸ் கே.வி.கிரி ஆகியோா் மாணவிகளுக்கு வெகுமதி அளித்துப் பாராட்டினா். இந்த விழாவில், கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜான்சன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) எம்.பக்தவத்சலம் ஆகியோா் உடனிருந்தனா்.