ரூ. 23.70 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 23.70 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மோகனூா், சீத்தப்பட்டி, பஞ்சப்பட்டி, நாகப்பனூா், மேட்டுப்பட்டி, பள்ளநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 51 விவசாயிகள் தங்களுடைய 1,038 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 51 ஆயிரத்து 195 கிலோ.
இதை வாங்குவதற்காக ஈரோடு, காரமடை, சித்தோடு, நடுப்பாளையம், பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 10 வணிகா்கள் வந்திருந்தனா். ஒரு கிலோ ரூ. 43.29 முதல் ரூ. 50.19 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 47.61. கடந்த வார சராசரி விலை ரூ. 48.32. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 23.70 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.