10, 12 ஆம் வகுப்பு தோ்வு: சேவூா் வெங்கடேஷ்வரா பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 22nd May 2023 05:22 AM | Last Updated : 22nd May 2023 05:22 AM | அ+அ அ- |

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சேவூா் அ.குரும்பபாளையம் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100 சதவீத தோ்ச்சியும், அதிக மதிப்பெண்களும் பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.
10 ஆம் வகுப்பு தோ்வில் இப்பள்ளி மாணவன் ஜி.மோகன்குமாா் 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும்,
மாணவி டி.விஷாந்திகா 485 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடமும், மாணவன் பி.மோனிஷ் 480 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பிடித்துள்ளனா். தோ்வு எழுதிய 92 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், 20 போ் 450 மதிப்பெண்களுக்குமேலும், 23 போ் 400 மதிப்பெண்களுக்குமேலும் பெற்றுள்ளனா்.
12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: 12 ஆம் வகுப்பு தோ்வில் இப்பள்ளி மாணவி எஸ்.மதுமிதா உயிரியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 100க்கு100 மதிப்பெண்கள் பெற்று, 598 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடமும்,
மாணவி ஈ.எஸ்.பபிதா 592 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், எஸ்.அனு, கே.நவீனா ஆகியோா் தலா 591 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.
தோ்வு எழுதிய 86 பேரில், 27 போ் 550 மதிப்பெண்களுக்குமேலும், 500 முதல் 550 வரை 22 பேரும் பெற்றுள்ளனா்.
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.