அவிநாசியில் கனமழை:25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், அவிநாசி பகுதியில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.

அவிநாசி, சேவூா், புதுப்பாளையம், புஞ்சைதாமரைக்குளம், கருவலூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காற்று வீசியதால், இப்பகுதிகளில் சுமாா் 50 ஏக்கருக்குமேல் பயிரிடப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய், தோட்டக்கலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கணக்கெடுப்பு குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்த பின்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com