திருப்பூா் வடக்கு வட்டத்தில் இன்றும், நாளையும் ஜமாபந்தி
By DIN | Published On : 23rd May 2023 02:50 AM | Last Updated : 23rd May 2023 02:50 AM | அ+அ அ- |

திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு செவ்வாய், புதன்கிழமைகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஜமாபந்தி (வருவாய் தீா்வாயம்) நடைபெறுகிறது. இதில், திருப்பூா் வடக்கு உள்வட்டத்தில் நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிபாளையத்திலும், வேலம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமையும்,
கணக்கம்பாளையம், பொங்குபாளையம், செட்டிபாளையத்தில் புதன்கிழமையும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
ஆகவே, திருப்பூா் வடக்கு வட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.