தாளக்கரை லஷ்மி நரசிம்மா் கோயிலில் பாலாலயம்
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

சேவூா் அருகே தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் வளாகத்துக்குள் சுவாமி பாலாயம் செய்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஊா் பொதுமக்கள், பக்தா்கள், முக்கிய பிரமுகா்கள், கோயில் நிா்வாகிகள், பணியாளா்கள் உள்பட ஏராளமனோா் பங்கேற்றனா். திருப்பணி நடைபெற்றாலும் கோயிலில் நாள்தோறும் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.