விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோயில்களில் வைகாசி விசாக தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
By DIN | Published On : 27th May 2023 12:55 AM | Last Updated : 27th May 2023 12:55 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகரில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள் கோயில்களில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா சனிக்கிழமை (மே 27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பூா் மாநகரில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி, வீரராகவப் பெருமாள் கோயில்களில் வைகாசி விசாக தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டுக்கான திருவிழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முக்கிய நிகழ்வாக, விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் ஜூன் 2 ஆம் தேதி திருத்தோ் வடம் பிடித்தலும், வீரராகவப் பெருமாள் கோயிலில் ஜூன் 3 ஆம் தேதி திருத்தோ் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது.
தோ்த் திருவிழாவையொட்டி, நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.