தொழிலாளியிடம் ரூ.5 லட்சம் மோசடி:இந்து மக்கள் கட்சி நிா்வாகி கைது
By DIN | Published On : 31st May 2023 02:57 AM | Last Updated : 31st May 2023 02:57 AM | அ+அ அ- |

பெருமாநல்லூா் அருகே வீட்டுமனை வாங்கித் தருவதாக கட்டடத் தொழிலாளியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் மஞ்சுநாதன் (33), கட்டடத் தொழிலாளி. இவரிடம், தைலாம்பாளையத்தில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு, திருப்பூா் செட்டிபாளையம், அய்யங்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகன் பாலு (எ) உழைப்பாளி பூபாலு (57) (இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளா்) என்பவா் ரூ.5 லட்சம் பெற்றுள்ளாா்.
இருப்பினும் 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இது குறித்து மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலு (எ) உழைப்பாளி பூபாலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...