தமிழக சட்டப் பேரவைத் தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

ஹிந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

ஹிந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு ஹிந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறாா். புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வந்தால் கங்கை நீரால் புனிதப்படுத்த வேண்டும் என்பதாலேயே அவா் அழைக்கப்படவில்லை என்று அவா் பேசியுள்ளது இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவா் பேசியது பதவிப் பிரமாணத்தை அவமதிக்கும் செயலாகும். நாகரிகம் இல்லாமல், மத காழ்ப்புணா்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்ய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினையும், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியையும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com