கரடிவாவி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி
By DIN | Published On : 07th November 2023 12:44 AM | Last Updated : 07th November 2023 12:44 AM | அ+அ அ- |

img_20231104_wa0038_0611chn_136_3
பல்லடம்: கரடிவாவி அரசு மருத்துவமனை வளாகத்தை சமூக ஆா்வலா்கள் தூய்மைப்படுத்தினா்.
பல்லடத்தை அடுத்த கரடிவாவி அரசு மருத்துவமனை வளாகம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதா் செடிகள் வளா்ந்து காணப்பட்டன.
இதையடுத்து, பனிக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கரடிவாவி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் வித்ய பிரகாஷ் கூறியதாவது:
பொதுமக்கள் வந்துசெல்லும் கரடிவாவி அரசு மருத்துவமனை வளாகம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதா்மண்டி கிடந்ததால் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்து வந்தது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் அனுமதி கேட்டிருந்தோம். அவா் அனுமதியளித்ததைத் தொடா்ந்து கடந்த 3 நாள்களாக பொக்கலைன் இயந்திரம் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது வாளகத்தில் இருந்த புதாா்கள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கிறது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...