சங்கோதிபாளையத்தில் நூலகம் திறப்பு
By DIN | Published On : 07th November 2023 12:50 AM | Last Updated : 07th November 2023 12:50 AM | அ+அ அ- |

மிகழ் வனம் தாவரவியல் பூங்கா நூலகம் திறப்புவிழாவில் பங்கேற்றோா்.
பல்லடம்: பல்லடத்தை அடுத்த சங்கோதிபாளையம் மகிழ் வனம் தாவரவியல் பூங்காவில் நூலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மகிழ்வனம் அமைப்பின் செயலா் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் கா.வீ.பழனிசாமி தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் லலிதாம்பிகை செல்வராஜ், கூப்பிடு விநாயகா் கோவில் அறக்கட்டளைத் தலைவா் சின்னசாமி, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவா் பாலசுப்பிரமணியம், மழைக் காடுகள் ஆராய்ச்சியாளா் மாணிக்கம், பல்லடம் ஒன்றியக் குழு உறுப்பினா் மங்கையா்க்கரசி கனகராஜ் ஆகியோா் கலந்துகொண்டு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினா்.
எஸ்.எல்.என்.எம். மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சத்தியநாதன் 400க்கும் மேற்பட்ட புத்தகங்களை மகிழ் நூலகத்துக்கு வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...