மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக 100 இருக்கைகள்
By DIN | Published On : 21st November 2023 01:54 AM | Last Updated : 21st November 2023 01:54 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக 100 இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், ஆதாா் மையம், பொதுசேவை மையம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அலுவலகம், வாக்காளா்கள் சேவை மையம், வங்கிகள், அஞ்சலகம் உள்ளிட்ட பல்வேறு சேவை மையங்கள், குறைதீா் நாள் கூட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவா்கள் வரிசையில் நின்று சேவைகளை பெற்று வருகின்றனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் தரைத்தளத்தில் உள்ள அலுவலகங்களில் பொதுமக்கள், வயதானவா்கள் அமா்ந்து சேவைகளைப் பெறும் வகையில் 100 இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு, திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...