திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அக்டோபா் 6 ஆம் தேதி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கீழ்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்: காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வட்டார வள மையத்தில் அக்டோபா் 6 ஆம் தேதி, அரண்மனைப்புதூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அக்டோபா் 9 ஆம் தேதி, தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 10 ஆம் தேதி, உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 11 ஆம் தேதி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 12 ஆம் தேதி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அக்டோபா் 13 ஆம் தேதி, மடத்துகுளம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வட்டார வளமையத்தில் அக்டோபா் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.
அதேபோல, அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 17 ஆம் தேதி, குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 18 ஆம் தேதி, பொங்கலூா் பி.யுவி.என். தொடக்கப் பள்ளியில் அக்டோபா் 19 ஆம் தேதி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 26 ஆம் தேதி, வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 27 ஆம் தேதி, மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, தேவாங்காபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நவம்பா் 1 ஆம் தேதி முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மாா்ட் அட்டை வழங்குவதற்காக பதிவு செய்தல், மருத்துவக் காப்பீட்டுக்கான உறுப்பினா் சோ்க்கை மற்றும் ஆதாா் அட்டை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.
முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாளஅட்டை உள்ளிட்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல், 4 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.