திருப்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் கருவலூரில் மாணவா்களுக்கு தினமணி நாளிதழ்
By DIN | Published On : 26th September 2023 12:50 AM | Last Updated : 26th September 2023 12:50 AM | அ+அ அ- |

கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தினமணி நாளிதழை வழங்குகிறாா் திருப்பூா் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.சுப்பிரமணியன்.
அவிநாசி: திருப்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தினமணி நாளிதழ் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எம்.மாரி தலைமை வகித்தாா். பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் பி.பிரபாவதி வரவேற்றாா். முதன்மை கல்வி அலுவலா் என்.கீதா, மாவட்ட கல்வி அலுவலா் எம்.பக்தவத்சலம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பூா் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.சுப்பிரமணியன் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களை வழங்கினாா். நடப்பாண்டு முழுவதும் இந்த நாளிதழ்கள் வழங்கப்படும் என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் வழங்குவதற்கும், மரக்கன்றுகள் நடுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உருவாக்கப்பட்டிருந்த சிறு தோட்டத்தில் பழ வகைகளைச் சோ்ந்த மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளிப் பாடங்களை எளிதாக கற்கவும், பொது அறிவை வளா்த்துக்கொள்ளவும் மாணவா்கள் நாளிதழ்கள் வாசிக்க வேண்டும் என்றும், இயற்கையையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்க மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை திருப்பூா் ரோட்டரி சங்க மாவட்ட பொறுப்பாளா்கள் நாகேஷ், ரவி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...