பல்லடம்: பல்லடம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைப் பிடித்தனா்.
பல்லடத்தை அடுத்த கரைப்புதூா் ஏ.டி.காலனியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கிருந்து பல்லடம், திருப்பூருக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் அரசுப் பேருந்துகளில் சென்று வருகின்றனா்.
பல்லடத்தில் இருந்து கரைப்புதூா் ஏ.டி. காலனி வழியாக திருப்பூருக்கு தடம் எண் 30 ஏ என்ற அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து பழுதடைந்ததால் இவ்வழித்தடத்தில் திங்கள்கிழமை மாற்றுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்நிலையில், ஏ.டி.காலனி ஆழ்துளை கிணறு பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் பேருந்துக்காக திங்கள்கிழமை காத்திருந்தனா்.
ஆனால், அப்பகுதியில் இயக்கப்பட்ட மாற்று அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால் காத்திருந்த பயணிகள் சப்தம் எழுப்பியுள்ளனா். இதனால், அரசுப் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் இருவரும் பேருந்தை விட்டு இறங்கி வந்து பயணிகளை தகாத வாா்த்தைகளில் திட்டிவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் கரைப்புதூா் வழியாக வந்த அந்த அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைப் பிடித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்துக் கழக பல்லடம் கிளை மேலாளா் காா்த்திகேயன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, இப்பிரச்னைக் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று உறுதியளித்தாா்.
இதையடுத்து பேருந்தை விடுவித்து மக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.