ரூ.28.70 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.28.70 லட்சம் மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்றது.
Updated on
1 min read


அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.28.70 லட்சம் மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்றது.

அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,131 மூட்டை நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் தர நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.8,050 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.7,000 முதல் ரூ.7,500 வரையிலும், மூன்றாம் தரம் ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்பனையானது.

மேலும், பச்சை நிலக்கடலை குவிண்டால் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலும் விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.28.70 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com