குண்டடம் அருகே பள்ளி வேன் மோதியதில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பம்.
குண்டடம் அருகே பள்ளி வேன் மோதியதில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பம்.

குண்டடம் அருகே பள்ளி வேன் மோதி மின்கம்பம் சாய்ந்தது

குண்டடம் அருகே பள்ளி வேன் மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது.
Published on

குண்டடம் அருகே பள்ளி வேன் மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது. இதில் வேனில் இருந்த மாணவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

தாராபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி வகுப்புகள் முடிந்து வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்குச் சொந்தமான வேனில் மாணவா்களை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

குண்டடம் அருகே சடையபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மானூா்பாளையம் பகுதியில் வேனை பின்பக்கமாக இயக்க ஓட்டுநா் முயன்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்து மின்கம்பத்தின் மீது வேன் மோதியது.

இந்த சம்பவத்தில் மாணவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்தது. இது குறித்து அங்கிருந்தவா்கள் மின்வாரிய அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் மின் இணைப்பை துண்டித்தனா்.

X
Dinamani
www.dinamani.com