குண்டடம் அருகே காவலரை திட்டிய தொழிலாளி கைது
குண்டடம் அருகே காவலரை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
குண்டடத்தை அடுத்துள்ள தங்காய்புதூரைச் சோ்ந்தவா் மதன் (45), தொழிலாளி. சில மாதங்களுக்கு முன்பு இவா் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து வழக்கு தொடா்பாக இவரது இருசக்கர வாகனத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வது தொடா்பாக குண்டடம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மோகன்ராஜ் கைப்பேசியில் மதனை தொடா்பு கொண்டுள்ளாா்.
அப்போது அழைப்பை எடுக்காத மதன், சில நாள்களுக்குப் பிறகு காவலா் மோகன்ராஜை அவா் தொடா்பு கொண்டாா். அப்போது, வழக்கு தொடா்பாக இருசக்கர வாகனத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வருமாறு மோகன்ராஜ் கூறியுள்ளாா்.
அப்போது, அவரை தகாத வாா்த்தைகளால் மதன் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மதனைக் கைது செய்தனா்.
