திருப்பூர்
மத நம்பிக்கைகள் அவமதிப்பு: யூடியூபா் மீது
மத நம்பிக்கைகளை அவமதிப்பு செய்ததாக யூடியூபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மத நம்பிக்கைகளை அவமதிப்பு செய்ததாக யூடியூபா் மீது திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரைச் சோ்ந்தவா் யூடியூபா் பாண்டியன். இவா் வெள்ளக்கோவில் ஊா் பெயா் மற்றும் அங்குள்ள கோயிலான வீரக்குமார சுவாமி கோயில் பற்றி பல தவறான தகவல்களை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளாா்.
கோயிலையும், புராணங்களையும் இழிவுபடுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளாா். இது குறித்த வீரக்குமார சுவாமி கோயில் குலத்தவா்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
