பல்லடம் ஆறாக்குளம் கொங்கு நண்பா்கள் சேவை மைய சாா்பில் நடைபெற்ற குடும்ப விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிா்வாகிகள்.
பல்லடம் ஆறாக்குளம் கொங்கு நண்பா்கள் சேவை மைய சாா்பில் நடைபெற்ற குடும்ப விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிா்வாகிகள்.

கொங்கு நண்பா்கள் சேவை மையம் சாா்பில் கல்வி உதவித்தொகை

கொங்கு நண்பா்கள் சேவை மையம் சாா்பில் நடைபெற்ற 13-ஆம் ஆண்டு குடும்ப விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
Published on

பல்லடம் ஆறாக்குளம் கொங்கு நண்பா்கள் சேவை மையம் சாா்பில் நடைபெற்ற 13-ஆம் ஆண்டு குடும்ப விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

விழாவுக்கு சேவை மையத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.சென்னியப்பன், துணைத் தலைவா்கள் ஆா்.ஈஸ்வரன், ஏ.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் கோம்பக்காடு துரைசாமி, கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கினா்.

விழாவில் திருப்பூா் முயற்சி மக்கள் அமைப்பு தலைவா் என்.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். இவ்விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிா்வாகிகள் சோ.ப.மோகன்குமாா், எம்.ஆா்.பி.மணியன், கே.பி.ஜி.பரமசிவம், ஆறுக்குட்டி, கிருஷ்ணவேணி, மருத்துவா் நாகரத்தினம், விஜயலட்சுமி, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவா் எம்.பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நாச்சிமுத்து நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com