பிடிபட்ட குரங்கு.
பிடிபட்ட குரங்கு.

வெள்ளக்கோவிலில் கூண்டில் சிக்கியது குரங்கு

வெள்ளக்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்கு செவ்வாய்க்கிழமை கூண்டுவைத்து பிடிக்கப்பட்டது.
Published on

வெள்ளக்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்கு செவ்வாய்க்கிழமை கூண்டுவைத்து பிடிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் பகுதிக்கு வந்த ஒரு லாரியின் மீது ஏறி வழிதவறி வந்த குரங்கு, காங்கயம் சாலை சேரன் நகா், தீரன் சின்னமலை நகா், மு. பழனிசாமி நகா் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக சுற்றித் திரிந்து பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தது. மளிகைக் கடைகள், வீடுகள் ஆகியவற்றுக்குள் புகுந்தும், இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் மற்றும் குழந்தைகளையும் விரட்டியும் வந்தது.

இதனால் குரங்கைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து காங்கயம் வனத் துறை சாா்பில் எல்.கே.ஏ. நகரில் கூண்டுவைத்து அதில் குரங்குக்கு பிடிக்கும் உணவுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்தக் கூண்டில் குரங்கு செவ்வாய்க்கிழமை சிக்கியது. பிடிபட்ட குரங்கை வனப் பகுதியில் விடுவிக்க வனத் துறையினா் எடுத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com