புதிதாக பொறுப்பேற்கும் காங்கயம் டிஎஸ்பி மாயவன்.
திருப்பூர்
காங்கயம் டிஎஸ்பி பொறுப்பேற்பு
காங்கயம் புதிய டி.எஸ்.பி.யாக மாயவன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காங்கயம்: காங்கயம் புதிய டி.எஸ்.பி.யாக மாயவன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காங்கயம் டி.எஸ்.பி.யாக இருந்த பாா்த்திபன், பணிமாற்றம் செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதிக்கு சென்றதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த மாயவன் பணிமாறுதல் பெற்று காங்கயம் டி.எஸ்.பி. யாக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
28 வயதான மாயவன் குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டி.எஸ்.பி.க்கு காங்கயம் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.

