

வெள்ளக்கோவிலை அடுத்த வள்ளியிரச்சல் பொன் அழகு நாச்சியம்மன் கோயில் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒன்பது குலத்தவா்களுக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேரோட்டம் நடத்தப்படும்.
இதைத் தொடா்ந்து நடப்பாண்டு தை மாதம் பிறந்தவுடன் முதல் புதன்கிழமை பொங்கல் விழா சாற்றப்பட்டது. இதையடுத்து இரண்டாவது புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதைத் தொடா்நந்து தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தோ்த் திருவிழாவையொட்டி வள்ளியிரச்சல் தமிழச்சி குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், சென்னிமலை காராளன் கலைக் குழுவின் கம்பத்தாட்டம் ஆகியவை நடைபெற்றன. கம்பத்தாட்டத்தில் காங்கயம் முன்னாள் எம்எல்ஏ விடியல் எஸ்.சேகா் பங்கேற்று ஆடினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.