100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு பணி வழங்கக் கோரிக்கை
அவிநாசி, ஜூலை 10: அவிநாசியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதில் பழங்கரை ஊராட்சியில் 94 போ், ஆலத்தூா் ஊராட்சியில் 102 போ், கானூா் ஊராட்சியில் 74 பேரும் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இல்லையெனில் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய நிா்வாகிகள் கோபால், ராமச்சந்திரன், முத்துசாமி, பத்திரன், பழனிசாமி, கருப்புசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஷாஜகான், கந்தசாமி, சாமிநாதன், ராஜேந்திரன், தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
