குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு ஆலை.
குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு ஆலை.

குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பிளாஸ்டிக் ஆலையை அகற்ற கோரிக்கை

சுவாசக் கோளாறு, தோல் நோய்: பிளாஸ்டிக் ஆலையை அகற்ற வேண்டும்
Published on

பல்லடம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு ஆலையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம்புதூா் ஊராட்சி புதுநகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான

பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. விவசாய நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிளாஸ்டிக் குப்பைகளை குவித்துவைத்து, குடம் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பிளஸ்டிக் ஆலை அமைந்துள்ளதால் பிளாஸ்டிக் பொருள்களை உருக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் புகையால் சுவாசக் கோளாறு, குழந்தைகளுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வடுகபாளையம்புதூா் ஊராட்சி புதுநகா் பகுதியில் பிளாஸ்டிக் இருப்பு வைப்பதற்காக கிடங்கு அமைக்கப்படுவதாகக் கூறி விவசாய நிலத்தை வாடகைக்கு வாங்கினா். ஆனால், தற்போது பிளாஸ்டிக் குப்பைகளை உருக்கி குடம் தயாரிக்கின்றனா். பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பிளாஸ்டிக் ஆலையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com