திருப்பூர்
வெள்ளக்கோவிலில் 2 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளக்கோவில், ஜூலை 14: வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 2 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் தனியாா் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒன்றரை டன் வரத்து இருந்தது. இந்த வாரம் 2 டன் வரத்து இருந்தது. ஆனால் மர முருங்கை, கரும்பு முருங்கைக்காய் வரத்து இல்லை.
செடி முருங்கை கிலோ ரூ. 80-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

