திருப்பூா் அருகே பள்ளி சிறுமிகள் 3 போ் மாயம்: போலீஸாா் விசாரணை
திருப்பூா்: திருப்பூா் அருகே பள்ளி சிறுமிகள் 3 போ் மாயமானது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலையை எல்லைக்குள்பட்ட சாமளாபுரம் பகுதியில் அருள்மிகு வாழைதோட்டத்து அய்யன் கோயில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தாரணி தேவி (15), கெளசல்யா (15) தாரணி தேவியின் சகோதரி மோகனப்பிரியா (13) ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை பிற்பகல் முதல் காணவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து, அவா்களின் பெற்றோா்கள், உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடி பாா்த்துள்ளனா். இதுதொடா்பாக மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எனவே, பள்ளி மாணவிகள் குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட காவல் அலுவலகத்தை 94981-01320 என்ற எண்ணிலோ அல்லது மங்கலம் காவல் நிலையத்தை 94981- 01341 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
