தீத் தடுப்பு செயல்விளக்கம் அளிக்கும் தீயணைப்பு வீரா். ~தீத் தடுப்பு செயல்விளக்கம் அளிக்கும் தீயணைப்பு வீரா்.

கோயில் பணியாளா்களுக்கு தீத் தடுப்பு செயல் விளக்கம்

முத்தூரில் கோயில் பணியாளா்களுக்கு தீத் தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
Published on

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் குப்பண்ண சுவாமி, செல்வக்குமார சுவாமி ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், அா்ச்சகா்களுக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வே.பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீத் தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

அப்போது, திடீரென தீப்பிடித்தால் அதை அணைக்கும் வழிமுறைகள், அவசர காலங்களில் முதலில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தீத் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் கோயில் செயல் அலுவலா் சாந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com