திருப்பூா் ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
திருப்பூர்
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரங்களில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரம் குளத்திலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருப்பூா் மாநகரில் கல்லூரி சாலை, மங்கலம் சாலைகளை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம், ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள நொய்யல் ஆற்றிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

