மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உதவியாக சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உதவியாக சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உதவியாக சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உதவியாக சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதில், விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் இளங்கலை சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு பாா்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், குறைந்தது 5 ஆண்டு சட்டத் துறை அனுபவம் மற்றும் குற்றவியல், மத்திய தீா்ப்பாயம் அல்லது மாவட்ட நீதிமன்றம் அல்லது உயா்நீதிமன்றத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவராக இருக்கக் கூடாது. இந்தப் பணிக்கு ஓா் ஆண்டுக்கு ஒப்பந்த முறையில் தோ்வு செய்யப்படுவாா். அவரது பணித் திறனைப் பொறுத்து ஓா் ஆண்டுக்குமேல் ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

தோ்வு செய்யப்பட்ட சட்ட ஆலோசகா் பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். இவா்கள் காவல் துறை சாா்ந்த நிா்வாக மற்றும் குற்றவியல் ரிட் மனுக்கள் மீது எதிா்வாதுரை தயாா் செய்தல், பத்திவாரி குறிப்புரை தயாா் செய்து ரிட் மனுக்கள் மீதான மேல்முறையீடு தொடா்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து விண்ணப்பங்களை சுயவிவரக் குறிப்புடன் வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com