புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி கந்தம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கிருந்த மளிகைக் கடையில் சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளரான கந்தம்பாளையத்தைச் சோ்ந்த ஜெகநாதன் (40) என்பவரை கைது செய்த போலீஸாா், கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com