அமராவதி ஆற்றில் செல்லும் உபரி நீா்.
அமராவதி ஆற்றில் செல்லும் உபரி நீா்.

அமராவதி அணையில் இருந்து 4-ஆவது நாளாக உபரி நீா் வெளியேற்றம்

அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து 4-ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
Published on

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா்கள் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், 90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உபரி நீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு உள்வரத்தாக வந்து கொண்டிருந்த 2,800 கன அடி நீரில் 2,375 கன

அடி நீா் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணையின் நீா்மட்டம்: 90 அடி உயரமுள்ள அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி

நீா்மட்டம் 88.19 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 2,800 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து 2, 375 கன அடி நீா் வெளியேறி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com