சிறப்பாகப்  பணியாற்றிய  காவல்  ஆய்வாளா்,  உதவி  ஆய்வாளா்களுக்கு  பாராட்டு  சான்றிதழ்களை  வழங்கிய  கோவை  சரக  காவல்  துறை  துணைத்  தலைவா்  ஏ.சரவணசுந்தா். உடன்,  காவல்  கண்காணிப்பாளா்  அபிஷேக் குப்தா .
சிறப்பாகப்  பணியாற்றிய  காவல்  ஆய்வாளா்,  உதவி  ஆய்வாளா்களுக்கு  பாராட்டு  சான்றிதழ்களை  வழங்கிய  கோவை  சரக  காவல்  துறை  துணைத்  தலைவா்  ஏ.சரவணசுந்தா். உடன், காவல்  கண்காணிப்பாளா்  அபிஷேக் குப்தா .

சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

திருப்பூா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள் உள்பட 27 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ.சரவணசுந்தா் வழங்கினாா்.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள் உள்பட 27 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ.சரவணசுந்தா் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் காவல் துறையினா் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபா்களையும் கைது செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பாக செய்பட்ட 3 காவல் ஆய்வாளா்கள், 4 உதவி ஆய்வாளா்கள், 20 காவலா்கள் என மொத்தம் 27 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ.சரவணசுந்தா் வழங்கினாா். இதில், குன்னத்தூா் காவல் நிலைய எல்லையில் திருடப்பட்ட 5.5 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கண்டுபிடித்ததற்காக காவல் ஆய்வாளா் சுசீலா, பல்லடம் காவல் நிலைய எல்லையில் வழிப்பறி வழங்கில் 6 பவுன் நகையை மீட்ட காவல் ஆய்வாளா் கவிதாலட்சுமி, அவிநாசிபாளையம் காவல் எல்லையில் 9 பவுன் நகையை மீட்ட காவல் ஆய்வாளா் விஜயா உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின்போது, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com