தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.
திருப்பூர்
வெள்ளக்கோவில் அருகே காட்டுத் தீ
வெள்ளக்கோவில் அருகே காட்டுத் தீ பரவல்: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை திடீரென பிடித்த காட்டுத் தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை மாந்தபுரத்தைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி (67). விவசாயியான இவருக்கு நாட்டராய சுவாமி கோயில் செல்லும் வழியில் 2 ஏக்கா் பரப்பளவில் கோரைக்காட்டு தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் அப்பகுதி மக்கள் சிலா் கால்நடைகளை சனிக்கிழமை மேய்த்துக் கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, அங்கு திடீரென பிடித்த தீ சில மணி நேரங்களில் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
சுதாரித்துக்கொண்ட கால்நடை மேய்ப்பாளா்கள், அங்கிருந்த ஆடு, மாடுகளை பாதுகாப்பாக அழைத்து வந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

