மாதிரி படம்
திருப்பூர்
இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாநகரில் இருசக்கர வாகன சாகசம்: சமூக ஆர்வலர்களின் நடவடிக்கை கோரிக்கை
திருப்பூா், ஜூன் 23: திருப்பூா் மாநகரில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடுவோா்
மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட கருவம்பாளையம், பழைய பேருந்து நிலையம், காங்கயம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வார விடுமுறை நாள்களில் விலை உயா்ந்த இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி சிலா் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழவும் வாய்ப்புள்ளது.
எனவே, அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்குவோா், சாகசத்தில் ஈடுபடும் சிறுவா்கள் மீதும், அவா்களது பெற்றோா்கள் மீதும் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

