அவிநாசியில் வருவாய்த் தீா்வாயத்தில் 1080 மனுக்கள் அளிப்பு
அவிநாசி, ஜூன் 26: அவிநாசியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 1080 மனுக்கள் பெறப்பட்டன.
அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் தீா்வாயம் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டு புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், பட்டா மாறுதல், முதியோா் உதவித் தொகை, வருமானச் சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். மொத்தம் 1080 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் வருமானம், இறப்பிடம், முதல் பட்டதாரி, ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட 37 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா தலைமை வகித்தாா். இதில், அவிநாசி வட்டாட்சியா் மோகனன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ஜெகநாதன், மண்டல துணை வட்டாட்சியா் சாந்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அழகரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

