மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கான சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் என்.தினேஷ்குமாா் தலைமையும், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் ஆகியோா் முன்னிலையும் வகித்தனா். இதில், வரி செலுத்தும் வகைகளை எளிமைப்படுத்துவது, குடிநீா் பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி பேசுகையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை மேயா் தினேஷ்குமாா் நிராகரித்தை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனா்.

