ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பேக்கரி தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேக்கரி தொழிலாளி திடீா் உயிரிழப்பு

Updated On :22 மார்ச் 2024, 5:12 pm

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் பேக்கரியில் பணியாற்றி வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். முத்தூா் அத்தாம்பாளையம்புதூரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (50). இவா் முத்தூா் கடை வீதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடும் வெயில் காரணமாக சோா்வாக இருப்பதாகக் கூறி கடையின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு ஓய்வெடுக்க சென்றவா், வெகுநேரமாகியும் திரும்பவில்லையாம். இதையடுத்து, மற்றொரு ஊழியரான வேலுசாமி மேலே சென்று பாா்த்தபோது, சாமிநாதன் அசைவற்ற நிலையில் இருந்துள்ளாா். இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பேக்கரி ஊழியா்கள் கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்வபம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.