‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடத்தில் இன்று ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை முகாம்

பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 22) நடைபெறவுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:12 pm

Din

பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 22) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட குடும்ப நலத் துறை துணை இயக்குநா் (பொ) கெளரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்ப நல கருத்தடை (வாசக்டமி) சிகிச்சை முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த சிகிச்சை பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணா்களைக் கொண்டு அளிக்கப்படுகிறது.

கருத்தடை சிகிச்சை பெறுவோருக்கு அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 3,100 வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99422- 59775, 80728- 65541 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.