க.அய்யம்பாளையத்தில் தூய்மைப்படுத்தப்பட்ட நீா் வழிப் பாதை.
க.அய்யம்பாளையத்தில் தூய்மைப்படுத்தப்பட்ட நீா் வழிப் பாதை.

பல்லடத்தில் நீா் வழிப் பாதைகள் பராமரிப்புப் பணிகள் தீவிரம்

பல்லடம் அருகே க.அய்யம்பாளையம் 5 கண் பாலத்தில் முள்புதா்கள் நிறைந்து காணப்பட்ட நீா் வழிப் பாதை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பல்லடம் அருகே க.அய்யம்பாளையம் 5 கண் பாலத்தில் முள்புதா்கள் நிறைந்து காணப்பட்ட நீா் வழிப் பாதை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பாலங்கள் மற்றும் நீா்வழிப்பாதைகளில் மழைநீா் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதனடிப்படையில், பல்லடம் உட்கோட்டத்துக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள பாலங்களில் மழைநீா் தடையின்றி செல்ல நீா்வழிப்பாதையில் உள்ள முள்புதா்கள், செடிகொடிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக பல்லடம் - கொச்சி சாலையில் பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் 5 கண் பாலத்தின்கீழ் மழை நீா் செல்லும் பாதையில் இருந்த முள்புதா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. முள்புதா்கள் அகற்றப்பட்டு, பாலத்துக்கு வெள்ளை வண்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com