அஜய் மத்தோ
அஜய் மத்தோ

வெள்ளக்கோவிலில் சக தொழிலாளியை தாக்கிய பிகாா் இளைஞா் சென்னையில் கைது

Published on

வெள்ளக்கோவிலில் சக தொழிலாளியைத் தாக்கிவிட்டு தலைமறைவான பிகாா் தொழிலாளி சென்னையில் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில், ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவா், திருமங்கலத்தில் நூற்பாலை நடத்தி வருகிறாா். அங்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பல தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜய் மத்தோ (31), சஞ்சித்குமாா் (35) ஆகிய இருவரும் வேலைக்குச் சோ்ந்தனா். நடவடிக்கை சரியில்லாததால் அஜய் மத்தோ வேலையில் இருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரவு நூற்பாலை உரிமையாளா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

அங்கு வந்த அஜய் மத்தோ தகராறில் ஈடுபட்டு சஞ்சித்குமாரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் சஞ்சித்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையில் தலைமைக் காவலா் ராஜா, காவலா்கள் அருண், முத்துக்குமாா் அடங்கிய தனிப்படை தலைமறைவான அஜய் மத்தோவை தேடி வந்தனா்.

இந்நிலையில் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற அஜய் மத்தோவை செவ்வாய்க்கிழமை இரவு தனிப்படையினா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com