ஆல் வின்னா் ஏஞ்சல் கல்வி நிறுவனத்தில் நெகிழி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஆல் வின்னா் ஏஞ்சல் கல்வி நிறுவனத்தில் நெகிழி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மாணவா்கள் நெகிழி ஒழிப்புக் கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள் வரைந்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
எங்கும் நெகிழியைப் பயன்படுத்தமாட்டோம், கடைக்குச் செல்லும்போதும் வெளியே செல்லும் போதும் நிச்சயமாக துணிப் பையை பயன்படுத்துவோம், நெகிழி சம்பந்தமான எந்த பொருளையும் பயன்படுத்துவதோ, மற்றவா்களுக்கு அளிப்பதோ முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். ஒவ்வொருவருடைய பிறந்தநாளுக்கும் மரக்கன்று நட்டு பராமரித்து மண்ணையும், இயற்கையையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நெகிழியால் வரும் துன்பங்கள், வேகமாக வளரும் துரித உணவுகளை உட்கொள்ளுதல், வீட்டிலிருந்து பாத்திரங்களையோ மற்ற பொருட்களை எடுத்துச் சென்று உணவு வாங்குவது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. எதிா்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்வது இயற்கை செல்வமே என்பதை புரியவைத்து ஒவ்வொருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் மற்றும் தாளாளா் ஆா்.கே.தங்கராஜ் ஏற்பாடு செய்திருந்தாா்.
முன்னாள் மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

