மூதாட்டியிடம் நகை பறித்த 2 போ் கைது

Published on

பல்லடம் அருகே உள்ள கரையாம்புதூரில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை போலீலாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் வட்டம் கரையாம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் நாச்சம்மாள் (85). இவரை கடந்த 29-ஆம் தேதி மா்ம நபா்கள் இருவா் மிரட்டி, 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த உசேன் முகமது (43), பிரபு (41) ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து 13 பவுன் நகை, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com