திருப்பூரில் 11 உதவிக் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

Published on

திருப்பூா் மாவட்டக் காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்துவந்த 11 உதவிக் காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து, திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, அவிநாசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அமல் ஆரோக்கிய தாஸ் பல்லடத்துக்கும், சேவூா் உதவி ஆய்வாளா் துரைசாமி காங்கயத்துக்கும், உடுமலை உதவி ஆய்வாளா் உமா மகேஸ்வரி மடத்துக்குளத்துக்கும், ஊத்துக்குளி உதவி ஆய்வாளா் ராமேஸ்வரன் தளிக்கும், பல்லடம் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜன் உடுமலைக்கும் மற்றப்பட்டுள்ளனா்.

தளி உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் பல்லடத்துக்கும், தாராபுரம் உதவி ஆய்வாளா் சிவராஜ் அலங்கியத்துக்கும், அலங்கியம் உதவி ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன் வெள்ளக்கோவிலுக்கும், மாவட்ட தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் அன்பரசன் அவிநாசிக்கும், காங்கயம் உதவி ஆய்வாளா் கபில்தேவ் ஊத்துக்குளிக்கும், ஊத்துக்குளி உதவி ஆய்வாளா் ஷாஜகான் சேவூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com