காங்கயம் அருகே படியூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
காங்கயம் அருகே படியூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

படியூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்!

படியூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
Published on

படியூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

காங்கயம் வட்டம் படியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு சிறப்புரையாற்றினா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள்அடையாள அட்டை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்கள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், தொழிலாளா் நலத் துறை சாா்பில் அடையாள அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை மற்றும் முழு உடல் பரிசோதனை அறிக்கை ஆகியவை பயனாளா்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சிவானந்தன், படியூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com