வட்டமலை அணைப் பகுதியில் பெண் உடல் மீட்பு
வெள்ளக்கோவில் அருகேயுள்ள வட்டமலை அணைப் பகுதியில் ரத்த காயங்களுடன் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில் அருகேயுள்ள உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப் பகுதியில் ரத்த காயங்களுடன் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காங்கயம் காவல் உதவி கண்காணிப்பாளா் அா்பிதா ராஜ்புத் தலைமையில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.பின்னா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவா் யாா், கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்க வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையில் ஊத்துக்குளி உதவி ஆய்வாளா் ரூபன் ராஜ் உள்ளிட்டோா் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
