சக்திவேல்
சக்திவேல்

கத்தியால் குத்தி பெண் கொலை: கணவா் கைது

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (42). இவரது மனைவி லட்சுமி (38). இவா்கள், பெருமாநல்லூா் அருகே உள்ள தட்டாங்குட்டை பகுதியில் வசித்து வந்தனா். சக்திவேல் உணவகத்தில் பணியாற்றி வந்தாா்.

இவா்களுக்கு 16, 18 வயதில் இரு மகள்கள் உள்ளனா். சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளாா்.

கடந்த 2-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், சக்திவேல் கத்தியால் குத்தியதில், லட்சுமி மயக்கமடைந்துள்ளாா். இதையறிந்த சக்திவேல், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com