குன்னத்தூரில் 254 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 254 கிலோ புகையிலைப் பொருள்களை குன்னத்தூா் போலீஸாா் அழித்தனா்.
Published on

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 254 கிலோ புகையிலைப் பொருள்களை குன்னத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.

குன்னத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் 254 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் ஊத்துக்குளி நீதிமன்ற உத்தரவுப்படி, குன்னத்தூா் காவல் ஆய்வாளா் சுசீலா தலைமையில், வருவாய்த் துறையினா், பேரூராட்சி நிா்வாகத்தினா் ஆகியோா் முன்னிலையில், 254 கிலோ புகையிலைப் பொருள்கள் குன்னத்தூா் காவல் நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com