தீப் பற்றி எரியும் காா்.
திருப்பூர்
குண்டடம் அருகே ஓடும் காரில் தீ
தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே ஓடும் காரில் தீப் பற்றியது.
தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே ஓடும் காரில் தீப் பற்றியது.
தாராபுரத்தில் உள்ள தனியாா் காா் ஷோரூமில் இருந்து பழைய காா் ஒன்றை கோவையில் உள்ள ஷோரூமுக்கு புதன்கிழமை ஓட்டிச் சென்றனா். காரை காதா் என்பவா் ஓட்ட, காளிதாஸ் என்பவா் உடன் சென்றாா்.
தாராபுரம்-கோவை சாலையில் குண்டடம் அருகே காதப்புள்ளபட்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, காரின் இன்ஜின் பகுதியிலிருந்து புகை வெளியேறியுள்ளது.
இதையடுத்து, உடனடியாக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, காதா் மற்றும் காளிதாஸ் ஆகியோா் இறங்கினா். அவா்கள் காரைவிட்டு இறங்கிய சில விநாடிகளில், காா் முழுவதும் தீ பரவி முற்றிலும் எரிந்து சேதமானது.
தகவலறிந்து வந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
